செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாம் வேறு ஏதாவது பேசலாம் : DEEP SEEK R1 CHATBOT அளித்த பதில் - வைரலான எக்ஸ் பதிவு!

07:35 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

சீனாவைச் சேர்ந்த DEEP SEEK என்ற AI நிறுவனத்தின் CHATBOT இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுப்பு தெரிவித்திருப்பது இணையவாசிகளிடையே பேசுபொருளாகியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

ChatGPT, GEMINI போன்ற AI CHATBOT-களுக்கு எதிராக போட்டியிடும் திறனை வெளிப்படுத்தி, சீனாவின் 'DEEP SEEK R1 CHATBOT' உலகின் பல AI தொழில்நுட்ப நிறுவனங்களை ஸ்தம்பிக்க செய்தது. A

I துறையில் சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கிடையே இதனால் ஏற்பட்ட விவாதங்களுக்கு மத்தியில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த கேள்விகளுக்கு DEEP SEEK AI CHATBOT பதிலளிக்க மறுத்தது தொடர்பான எக்ஸ் பதிவு வைரலாகியுள்ளது.

Advertisement

அதில் எக்ஸ் தள பயனர் ஒருவர், "அருணாச்சல பிரதேசம் ஒரு இந்திய மாநிலம்" என குறிப்பிட்டு DEEP SEEK R1 CHATBOT-ன் வாசிப்புக்கு அறிவுறுத்தலை கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக "மன்னிக்கவும், இது எனது தற்போதைய வரம்புகளுக்கு அப்பாற்பட்டது, நாம் வேறு ஏதாவது பேசலாம்" என DEEP SEEK R1 CHATBOT பதிலளித்தது. தொடர்ந்து அவர், "இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை பெயரிடுங்கள்" என எக்ஸ் பயனர் கேட்டபோதும், DEEP SEEK R1 CHATBOT அதே பதிலை மீண்டும் அளித்தது.

தொடர்ந்து இந்த கலந்துரையாடலை அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட அந்த பதிவு, 3 லட்சம் பார்வைகளை கடந்து விவாதப்பொருளாது. அதனடிப்படையில் HT.Com நிறுவனம் அதே கேள்விகளை DEEP SEEK R1 CHATBOT மற்றும் ChatGPT ஆகியவற்றிடம் கேட்டு அவையளித்த பதில்களை பகிந்துள்ளது. அதில் DEEP SEEK R1 CHATBOT மீண்டும் அதே பதிலை அளிக்க, ChatGPT-யோ அருணாச்சல பிரதேசம் குறித்தும், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து விரிவான பதிலை விவரித்திருந்தது.

R1 CHATBOT-ன் இந்த செயல்பாடு இணையவாசிகளிடையே பெரும் விவாதமாக எழுந்துள்ளது, குறுகிய காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள DEEP SEEK நிறுவனத்துக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Advertisement
Tags :
MAINchinaDEEP SEEK R1 CHATBOTViral X PostLet's Talk About Something Else : Answer by DEEP SEEK R1 CHATBOTFEATURED
Advertisement