செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து : மத்திய அரசு அறிவிப்பு!

05:17 PM Jan 23, 2025 IST | Murugesan M

நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

டெல்லியில் நேற்று மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர், ஸ்ரீ ஜி. கிஷன் ரெட்டியை, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் சந்தித்தனர். நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமவளத் தொகுதியில் அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுச் சின்னம் மற்றும் ஏராளமான கலாசார பாரம்பரிய இடங்கள் அடங்கியுள்ளதாக மத்திய அமைச்சரிடம் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் தொகுதி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். விவசாய குழுவின் பேச்சை பொறுமையாக கேட்ட மத்திய அமைச்சர், பல்லுயிர் மரபு பாதுகாப்புக்கு மத்திய அரசு முழு ஆதரவளிப்பதாக தெரிவித்தார்.

விரிவான ஆலோசனைக்குப் பிறகு, அப்பகுதியில் உள்ள பல்லுயிர் பாரம்பரிய தளத்தின் முக்கியத்துவம் மற்றும் பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசின் அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நாயக்கர்பட்டி டங்ஸ்டன் கனிமத் தொகுதியின் ஏலத்தை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
bjp k annamalaiFEATUREDk annamalaiMaduraiMAINMinistry of Mines Decisiontamil janam tvtn govttungsten mineTungsten Mine Plan Cancelledtungsten mine tamil naduTungsten mining project cancellation: Central government announcement!டங்ஸ்டன் சுரங்கம்டங்ஸ்டன் திட்டம் ரத்துமதுரை மாவட்டம் அரிட்டாபட்டி
Advertisement
Next Article