செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாளை தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர்!

10:48 AM Nov 26, 2024 IST | Murugesan M

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நாளை தமிழகத்திற்கு வர உள்ளார்.

Advertisement

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனுக்குச் சென்று தங்குகிறார்.

நாளை மறுநாள் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அவர், வரும் 30ஆம் தேதி திருச்சிக்கு செல்கிறார்.

Advertisement

அங்கிருந்து திருவாரூர் செல்லும் குடியரசு தலைவர், அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். குடியரசு தலைவரின் வருகையையொட்டி குன்னூர் ராணுவ முகாமில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
MAINThe President is coming to Tamil Nadu tomorrow!
Advertisement
Next Article