நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிறது!
தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் அரசு, பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற்றது.
பொதுத்தேர்வுக்கு முன்பாக, பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரி 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்றது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 616 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் தயாரிக்கும் பணிகளும் நடந்து முடிந்தன.
இதனையடுத்து திட்டமிட்டபடி, நாளை காலை தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளின் செல்போன் எண்களுக்கு மதிப்பெண்களுடன்
இதுதவிர, அரசுத் தேர்வு இயக்ககத்தின் இணைய தளங்களான www.results.nic.in, www.dge.tn.gov.in வாயிலாகவும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இத்துடன் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், பொது நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.