நாளை முதல் பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது - சபரிமலை தேவசம்போர்டு அறிவிப்பு!
12:32 PM Jan 10, 2025 IST | Murugesan M
நாளை முதல் ஜனவரி 14 வரை பெரு வழிப்பாதையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என சபரிமலை திருவிழா கட்டுப்பாடு அதிகாரி தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில், வரும் 14 -ம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. இதனையொட்டி, சபரிமலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Advertisement
கடந்த 11 நாட்களில் 10 லட்சம் பேரும், இதுவரை 42 லட்சம் பேரும் தரிசனம் செய்துள்ளனர். தற்போது, பக்தர்கள் 10 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement