நாளை விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!
இஸ்ரோவின் 100ஆவது ராக்கெட்டான ஜிஎஸ்எல்வி எப்-15 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் காலை 5.23 மணிக்கு தொடங்கியது.
Advertisement
இஸ்ரோ சார்பில் ஜிஎஸ்எல்வி -எப்15 ராக்கெட் நாளை காலை 6.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் காலை 5.23 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டுடன் செலுத்தப்படும் என்விஎஸ்-02 செயற்கைக்கோளை வடிவமைப்பதற்கு இந்திய தொழில்துறை நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஜிபிஎஸ் சேவைக்காக இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் கீழ் செயல்படும் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டது என்றும், இஸ்ரோ தனது 100-வது செயற்கைக்கோளை ஏவுவதன் மூலம் வரலாறு படைக்கவுள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.