செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

05:53 PM Apr 07, 2025 IST | Murugesan M

புதுக்கோட்டைத் தஞ்சை உள்பட 5 மாவட்டங்களில் நாளை  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் செவ்வாய் அல்லது புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி தெற்கு வங்கக்கடல் பகுதியில் 36 மணி நேரத்துக்கு முன்னதாகவே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது உருவாகியுள்ளது.

Advertisement

இதன் காரணமாகச் செவ்வாயன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 5 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Heavy rain likely in 5 districts tomorrow!MAINtamil nadu rain todayTN Rain update
Advertisement
Next Article