செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நித்தியானந்தா மேல்முறையீடு மனு தள்ளுபடி!

05:38 PM Jan 31, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மடங்களில் தக்கார் நியமனம் தொடர்பான நித்தியானந்தாவின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நான்கு மடங்களின் மடாதிபதியாக நித்தியானந்தாவை நியமித்து மடாதிபதி ஆத்மானந்தா அறிவித்தார்.

ஆத்மானந்தா மறைந்ததை அடுத்து, பக்தர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்தது.

Advertisement

இதனை எதிர்த்து நித்தியானந்தா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசு பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து நித்தியானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நித்தியானந்தா இந்தியாவிலேயே இல்லை என்றும், தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் உள்ளதாகவும் இந்துசமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறியதுடன், இந்தியாவிலேயே இல்லாத நித்தியானந்தாவின் வழக்கை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

முன்னதாக நித்தியானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா என்றாலே பிரச்சினையாக இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisement
Tags :
MAINNithyananda's appeal dismissed!
Advertisement