நிர்மலா சீதாராமன், ஜே.பி. நட்டா மீதான வழக்கு தள்ளுபடி!
பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டியதாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நட்டா உள்ளிட்டோர் மீதான வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பாஜகவுக்கு நன்கொடை அளிக்க வேண்டும் என பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டியதாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், நட்டா ஆகியோருக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
புகார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, திலக்நகர் போலீசார் நிர்மலா சீதாராமன், அமலாக்கத்துறை, நட்டா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, கர்நாடக பாஜக முன்னாள் தலைவர் நளின்குமார் கட்டீல் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, புகார்தாரர் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் இல்லை எனவும், மிரட்டி பணம் பறித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்தஇந்த வழக்கை மேற்கொண்டு தொடர அனுமதி முடியாது என்றும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.