செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நிலக்கரித் துறையில் சீரான வளர்ச்சி : உற்பத்தி 5.88% அதிகரிப்பு!

02:05 PM Feb 03, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

இந்தியாவின் நிலக்கரித் துறை தொடர்ந்து மீள்தன்மை மற்றும் வளர்ச்சியைக் காட்டுகிறது. ஏப்ரல் 2024 முதல் ஜனவரி 2025 வரை உற்பத்தி மற்றும் விநியோகம் இரண்டிலும் நிலையான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது குறித்து  வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்,

ஜனவரி 2025-ல் மொத்த நிலக்கரி உற்பத்தி 104.43 மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 100.05 மெட்ரிக் டன்னை விட 4.38% அதிகமாகும்.

Advertisement

ஜனவரி 2025-ல் நிறுவனங்களின் சொந்த உற்பத்தி,வணிக மற்றும் பிற நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியன வலுவாக உள்ளன. உற்பத்தி 19.68 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 15.01 மெட்ரிக் டன்னாக இருந்தது. வளர்ச்சி 31.07% அதிகமாகும்.

ஜனவரி 2025 வரையிலான ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 830.66 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தின் உற்பத்தியான 784.51 மெட்ரிக் டன்னிலிருந்து 5.88% அதிகரிப்பைக் குறிக்கிறது.

இதேபோல், நிலக்கரி விநியோகித்தலும் இந்த வளர்ச்சியுடன் வேகத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஜனவரி 2025-ல் மொத்த நிலக்கரி விநியோகம் 92.40 மெட்ரிக் டன்னாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் 86.92 மெட்ரிக் டன்னிலிருந்து 6.31% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள், நிலையான எரிசக்தி விநியோகத்தை உறுதி செய்வதில் இந்தத் துறையின் வலுவான செயல்திறனை சுட்டிக் காட்டுகின்றன. நிலக்கரி அமைச்சகம், துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
MAINSteady Growth in Coal Sector: Production to Increase by 5.88% Till January 2025!Union Ministry of Coal
Advertisement