செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? - தமிழக சுகாதாரத்துறைக்கு அண்ணாமலை கேள்வி!

01:50 PM Jan 07, 2025 IST | Murugesan M

நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என தமிழக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மின்சாரம் தாக்கி, அவசர சிகிச்சைக்காக சென்ற பாண்டித்துரை என்பவர், மருத்துவர் இல்லாததால், முதலுதவி கூடக் கிடைக்காமல் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகம் முழுவதுமே, சுகாதாரத் துறையில், உயிரிழப்புகள் மிகவும் அதிகரித்துள்ளது. இதன் அடிப்படைக் காரணம் என்னவென்றால், போதிய அளவு மருத்துவர்கள் நியமனம் செய்யாமல் இருப்பது தான்.

Advertisement

தமிழகம் முழுவதும், 1,467 மருத்துவர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது, சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரிய வந்துள்ளது.

அனைத்து அரசுத் துறைகளிலுமே காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஒரு புறம் இருக்க, பொதுமக்கள் உயிருக்குப் பொறுப்பான சுகாதாரத் துறையில் கூட, போதிய மருத்துவர்களை நியமிக்காமல் இருப்பது, அரசு மருத்துவமனைகளை நாடும் ஏழை, எளிய பொதுமக்கள் உயிரை திமுக அரசு கிள்ளுக்கீரையாகப் பார்க்கிறது என்பதை வெளிக்காட்டுகிறது.

தமிழக சுகாதாரத் துறையில் குறைந்தது வாரம் ஒரு உயிரைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதைக் கவனிப்பதை விட, சுகாதாரத் துறையில் அப்படி என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர்? உயிர்கள் பலியான பிறகு, நீங்கள் ஆடும் நிவாரண உதவி நாடகம், போன உயிரை மீட்டுக் கொண்டு வருமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINannamalairamanathapuramtamil nadu governmentTamil Nadu BJP State PresidentR.S. Mangalam Primary Health CenterPandithuraigovernment hospitals
Advertisement
Next Article