நீண்ட காலமாக செயல்படாத வங்கிக் கணக்குகள் - இன்று முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு!
06:30 PM Jan 01, 2025 IST
|
Murugesan M
நீண்டகாலமாக செயல்படாத வங்கிக் கணக்குகளை ஜனவரி 1 முதல் முடக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
Advertisement
செயல்படாத வங்கிக் கணக்குகளின் வாயிலாக சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெறுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் செயல்படாத கணக்குகள் அல்லது பூஜ்யம் இருப்புத் தொகை கொண்ட கணக்குகளை முடக்க ஆர்பிஐ பரிசீலித்து வருகிறது.
இதேபோல கணக்கில் பணமிருந்தும் 12 மாதங்களாக எந்தவொரு பரிவர்த்தனையும் நடைபெறாத கணக்குகளும் முடக்கப்படும் சூழல் உருவெடுத்துள்ளது. இதனால் நீண்டகாலமாக வங்கிக் கணக்கை செயல்படுத்தாமல் இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட கிளைக்குச் சென்று ஆக்டிவேட் செய்யுமாறு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
Next Article