நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு!
நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போலக் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும் டெல்லியில் நீதிபதி வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரம் தொடர அனுமதிக்குமாறு ஓம் பிர்லா பலமுறை வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல மாநிலங்களவையிலும் கட்நாடக விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவையும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற இரு அவைகளும் கூடிய நிலையில், மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.