செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை

09:23 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

வேங்கைவயல் விவாகரத்தில் நீதிமன்றங்களை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Advertisement

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி தர வேண்டுமென கண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட மக்கள் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை கண்டறியக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார்.

Advertisement

அப்போது கோபமடைந்த நீதிபதி நிர்மல் குமார், வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசு தரப்பு தெளிவாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

எதிர்ப்பதற்கு ஏதாவது நோக்கம் இருக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் முறையான விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் போராட்டம் நடத்துவது தேவையற்றது எனக் கூறி வழக்கை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.

Advertisement
Tags :
FEATUREDMadurai high courtMAIINpudukkottai vengaivayalpudukkottai vengaivayal dalit water tank issuepudukkottai vengaivayal water tank issuepudukottai vengaivayal casevengaivasalvengaivasal issue in tamilvengaivasal newsVengaivayal case.vengaivayal issuevengaivayal newsvengaivayal problemVengaivayal.vengavayal
Advertisement