நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜர்!
அறப்போர் இயக்கத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
நெடுஞ்சாலை துறையில் டெண்டர் விதிகள் மீறப்பட்டதால், 2016-21ம் காலகட்டத்தில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
அறப்போர் இயக்கத்தின் குற்றச்சாட்டு தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி 2022-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாஸ்டர் நீதிமன்ற நீதிபதி மகாலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணைக்கு நேரில் ஆஜரான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவதூறு வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்பித்து சாட்சியம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை டிசம்பர் 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.