செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீதிமன்றத்தில் காலணிகளை வீசிய கருக்கா வினோத் - சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு!

09:47 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னை பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், விசாரணையின்போது காலணிகளை கழற்றி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கருக்கா வினோத், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

Advertisement

அப்போது, தான் அணிந்திருந்த காலணிகளை கழற்றி நீதிபதி முன் வீசிய கருக்கா வினோத், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென ஆவேசமாக முழக்கம் எழுப்பினார். இதனால் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார், பலத்த பாதுகாப்புடன் கருக்கா வினோத்தை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Advertisement
Tags :
FEATUREDKarukka VinothMAINNational Investigation Agency Special CourtPoonamallee.shoes thrown in court
Advertisement