நீரிழிவு நோயாளிகளுக்கு புதிய வகை இன்சுலின் ஊசி!
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த தினசரி இன்சுலின் ஊசி தேவைப்படும் நோயாளிகளுக்கு டெருமோ இந்தியா நிறுவனம் புதிய வகை இன்சுலின் சிரிஞ்சை அறிமுகப்படுத்தியுள்ளது.
Advertisement
இந்தியாவில் சுமார் 100 மில்லியன் நோயாளிகளுக்கு நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் சுமார் 14 சதவீத நோயாளிகளுக்கு நோயை நிர்வகிக்க தினசரி இன்சுலின் தேவைப்படுகிறது.
இந்த அவசியத்தை விவரித்த PSD-இந்தியா மற்றும் சீனாவின் மூத்த இயக்குநர் ஆஷித் சிக்கா, "தினமும் இன்சுலின் ஊசி தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருந்துகளை துல்லியமாகவும் எளிதாகவும் வழங்குவது முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
உயர்தர சிலிகான் மேற்பரப்புடன் கூடிய 3-பெவல் சூப்பர் ஷார்ப் ஊசியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிரிஞ்ச் மென்மையானது மற்றும் நோயாளிகளுக்கு மிகவும் வசதியானது. உயரிய தொழில்நுட்பத்துடன் அதன் தனித்துவமான அம்சம் கசிவு மற்றும் டோஸ் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கிறது.
U 40 மற்றும் U 100 அளவுகோல்களில் இந்த ஊசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.