நீர்வரத்து அதிகரிப்பு - குற்றால அருவிகளில் 3-வது நாளாக குளிக்க தடை!
12:16 PM Dec 14, 2024 IST
|
Murugesan M
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
தென்காசியின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் மற்றும் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும், மழை தொடர்ந்து பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Advertisement
Next Article