நீலகிரியில் கடையடைப்பு : உணவுகள் கிடைக்காமல் தவிப்பு - அம்மா உணவகங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
02:31 PM Apr 02, 2025 IST
|
Murugesan M
உதகை, கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.
Advertisement
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்திற்கு அனைத்து வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதற்கு, உணவகங்கள், உள்ளூர் ஆட்டோ ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
Advertisement
முழு அடைப்பு போராட்டம் காரணமாக உணவுகள் கிடைக்காமல் தவித்து வரும் சுற்றுலாப் பயணிகள், அம்மா உணவகம் மற்றும் ரயில்வே கேண்டினில் உணவுக்காகக் குவிந்தனர்.
மேலும், உதகையில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Advertisement