செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நீலகிரி, கொடைக்கானல் இ-பாஸ் நடைமுறை - நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது!

06:15 AM Apr 01, 2025 IST | Ramamoorthy S

நீலகிரி, கொடைக்கானலுக்கு  செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Advertisement

நீலகரி, கொடைக்கானலுக்கு வரும் வாகனங்கள் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என கடந்த 13 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்ற உத்தரவு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

Advertisement

இ-பாஸ் விண்ணப்பித்து பெற பிரத்யேக இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வார நாட்களில் ஆறாயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் எட்டாயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து, சரக்கு வாகனங்கள், நீலகிரி பதிவு எண் உள்ள வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கொடைக்கானலுக்கு வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் ஆறாயிரம் வாகனங்களுக்கும் மட்டும் அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு முதல் செயல்பாட்டிற்கு வந்த நடைமுறை ஜூன் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
e-passe-pass mandatory for vehiclesFEATUREDkodaikanalmadras high courtMAINNilgiris
Advertisement
Next Article