செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொடரும் மோசடி – திமுக திசைதிருப்ப முயல்வதாக அண்ணாமலை குற்றச்சாட்டு!

07:59 PM Mar 29, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

நூறு நாள் வேலைத்திட்டத்தில் மோசடி தொடர்வதாகவும், கிராமசபைக் கூட்டம் என கூறி போராட்டத்தில் பங்கேற்க வைக்க முயற்சி செய்ததால் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆரிடம்  பாஜக பெண் நிர்வாகி சரமாரியாக கேள்வி எழுப்பியதாக அணணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதில் இன்றைய தினம், விருது நகர் மாவட்டத்தில், கிராமசபைக் கூட்டம் என்று கூறி பொதுமக்களை வரச் சொல்லி, திமுக நடத்தும் போராட்ட நாடகத்தில் பங்கேற்க வைக்க திமுக அமைச்சர்  கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன். முயற்சித்துள்ளார் என்றும், அங்கிருந்த பாஜக அருப்புக்கோட்டை வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சகோதரி மீனா  இது குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பியதும், உடனடியாக அமைச்சர். அங்கிருந்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், மத்திய அரசு நாட்டில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு, 39,339 கோடி ரூபாய் வழங்கியுள்ளதை தமிழக மக்கள் அறிவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

தமிழகத்துக்கு அதிக நிதி வழங்கப்பட்டுள்ள விவரங்களை, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழியிட ம், மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெளிவாகக் கூறியுள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், அந்த நிதி என்ன ஆனது என்பதைக் கூறாமல் மோசடி நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக. தமிழகத்தில் நூறு நாள் வேலைத்திட்டத்தில் திமுக ஆதரவோடு நடக்கும் மோசடிகள் குறித்துப் பல முறை புகார் அளித்தும், தொடர்ந்து மோசடியில் ஈடுபடும் திமுகவின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் நம்பப் போவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
MAINannamalaikkssrMinister KKSSR RamachandranGram Sabha meetingBJP Aruppukottai North Union Vice President Sister MeenaFEATURED
Advertisement