செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் - 3 இளைஞர்கள் உயிரிழப்பு!

02:23 PM Apr 15, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெமிலி அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவர் தனது நண்பர் பிரேம் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.

இதேபோன்று, ஆட்டுப்பக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரும் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சேந்தமங்கலத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அடுப்பக்கம் அருகே சென்றபோது இரண்டு இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெற்றிவேல், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மற்ற இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில், பிரேம் என்பவர் உயிரிழந்த நிலையில், ரஞ்சித் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
3 youths killed in head-on collision between two motorcycles near Nemili3 இளைஞர்கள் உயிரிழப்புMAIN
Advertisement