நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் - மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை!
09:46 AM Jan 24, 2025 IST | Sivasubramanian P
நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. இது குறித்து நாகை மாவட்டம் எரவாஞ்சேரி, சீயாத்தமங்கை, பட்டமங்கலம் ஆகிய பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்ட நெல்லின் ஈரப்பதத்தை அதற்கான கருவி மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றதோடு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். அப்போது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உடனடியாக உயர்த்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
Advertisement
Advertisement