நெல்லையில் சிறையிலிருந்து ஜாமினில் வந்தவர் கொலை - போலீஸ் விசாரணை!
08:55 AM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
நெல்லையில் சிறையிலிருந்து ஜாமினில் வந்த நபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
நெல்லை டவுன் அடுத்த தென்பத்து பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் லாரி ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக புகாரளிக்கப்பட்ட நிலையில் ஜெகந்நாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த ஜெகந்நாதன் டவுன் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு சென்ற மர்ம நபர் ஒருவர் ஜெகந்நாதனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
Advertisement
இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்ட நிலையில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தனிப்படை அமைத்து கொலை செய்தவரை தேடி வருகின்றனர்.
Advertisement