நெல்லை : அடகுவைத்த நகைகளை மீட்க அல்லல்படும் வாடிக்கையாளர்கள்!
நெல்லையில் உள்ள தனியார் வங்கியில் தாங்கள் அடகுவைக்கும் நகைகள் வேறு ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Advertisement
அரியகுளம் பகுதியை சேர்ந்த பானுப்பிரியா என்பவர், பாளையங்கோட்டை - திருவனந்தபுரம் சாலையில் உள்ள சிஎஸ்பி என்ற வங்கியில் தனது நகைகளை அடகு வைத்துள்ளார்.
அதனை திருப்புவதற்காக வங்கிக்கு சென்றபோது, பானுப்பிரியாவின் நகைகள், மூன்றாம் நபரான வெளியாட்கள் பெயர் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும், அதனை திருப்ப முடியாது எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தனது நகைகளை திருப்ப பானுப்பிரியா நாள்தோறும் வங்கிக்கு வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல பல பேருடைய நகைகள், பான் புரோக்கர் எனப்படும் நபர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து காவல்துறை உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.