நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி திருட்டு - போலீஸ் விசாரணை!
12:25 PM Dec 06, 2024 IST
|
Murugesan M
நெல்லை அருகே எல்லை பாதுகாப்பு படை வீரரின் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Advertisement
திருநெல்வேலியைச் சேர்ந்த அழகு என்பவர் இந்திய எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு மதுரையில் பெருமாள்சாமி என்பவரிடம் துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களை வாங்கியுள்ளார்.
இதில், 5 குண்டுகளை சோதனைக்கு பயன்படுத்திய நிலையில், எஞ்சிய 25 குண்டுகளை தனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டு பஞ்சாப் சென்றுள்ளார்.
Advertisement
இந்நிலையில், , நெல்லை சமூகரெங்கபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த கத்தி, துப்பாக்கி மற்றும் 25 குண்டுகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளனது. இது தொடர்பான புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
Next Article