நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் இயக்கம்!
நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கூடுதல் பெட்டிகளுடன் தனது பயணத்தை தொடங்கியது.
நெல்லையிலிருந்து தினந்தோறும் காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதுரைக்கு 7.50-க்கும், திருச்சிக்கு 9.45 மணிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது.
ரயிலில் ஆரம்பத்தில் 7 ஏசி சேர்கார் பெட்டிகள், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர்கார் பெட்டி என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது 16 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
முதல் நாளான இன்று, வந்தே பாரத் ரயில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பியது. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில், மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.