செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை ஜாகீர் உசேன் கொலை வழக்கு - முக்கிய நபரை சுட்டுப்பிடித்த போலீசார்!

08:56 AM Mar 20, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

நெல்லையில் ஓய்வுபெற்ற எஸ்ஐ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை போலீசார் சுட்டு பிடித்தனர்.

Advertisement

நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற எஸ்ஐ ஜாகீர் உசேன் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நெல்லை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் அக்பர்ஷா, கார்த்திக் ஆகியோர் சரண் அடைந்தனர்.

வழக்கின் முக்கிய குற்றவாளியான முகமது தவுபிக் என்ற கிருஷ்ணமூர்த்தியை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்துள்ளனர்.

Advertisement

ரெட்டியார்பட்டி மலை பகுதியில் பதுங்கியிருந்த தவுபிக்கை போலீசார் சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது அவர் அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதாகவும், இதன் காரணமாக  துப்பாக்கிச்சூடு நடத்தி அவரை பிடித்ததகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  காயமடைந்த முகமது தவுபிக் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement
Tags :
MAINNellaiNellai Judicial Magistrate CourtPolice shot key person of zahir hussain murder caseRetired SI Zakir Hussain murder case
Advertisement