நெல்லை : நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம்!
02:22 PM Mar 17, 2025 IST
|
Murugesan M
நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் தனியார் அமைப்பு சார்பில் நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
Advertisement
போட்டியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்துகொண்டன. 4 சுற்றுகளாக நடந்த போட்டியில் வெற்றி பெற்ற நாயின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 30 ஆயிரத்து 1 ரூபாயும், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 3-ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
நாய்கள் போட்டிப் போட்டுக்கொண்டு சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதி மக்கள் ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
Advertisement
Advertisement