செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

02:55 PM Jan 19, 2025 IST | Sivasubramanian P

நெல்லை மாவட்டத்தில் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நெல்லை மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,  தென் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Advertisement
Tags :
nellai rain alertFEATUREDMAINheavy rain alertChennai Meteorological Departmenttamilnadu rain alert
Advertisement
Next Article