பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை : இந்து முன்னணி மாநில தலைவர்
பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அரசின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
Advertisement
திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், கோயில் உண்டியல் நிறைகிறதா என்று இந்த அரசு பார்க்கிறதே தவிர பக்தர்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ள அவர், பக்தர்களின் பிரச்சனைகளைக் காது கொடுத்துக் கேட்க அமைச்சர் சேகர்பாபு மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த 2 உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.