பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
HMPV வைரஸ் பரவல் காரணமாக திருப்பதிக்கு வருதை தரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி ஆர் நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், வைகுண்ட ஏகாதிசியை ஒட்டி வரும் 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை திருப்பதி மலையில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் என்றும் தரிசன டிக்கெட்டை எடுத்து வரும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பக்தர்கள் ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வசதியாக திருப்பதியில் உள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருமலையில் உள்ள ஒரு கவுண்டர் ஆகியவற்றில் இலவச தரிசன டோக்கன்கள் நாளை முதல் வழங்கப்படும் என்றும் பி.ஆர்.நாயுடு கூறினார். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.