பசிபிக் பெருங்கடலில் 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாடூ தீவில் இன்று காலை 7.3 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
Advertisement
இந்த நிலநடுக்கம் தலைநகர் போர்ட் விலாவிற்கு மேற்கே 30 கிமீ தொலைவில் நிலத்துக்கடியில் சுமார் 43 கி.மீ. ஆழத்தில் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பசிபிக் தீவு மாநிலம் முழுவதும் சுனாமி எச்சரிக்கையை அதிகாரிகள் வெளியிட்டனர்.
இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து தெரியவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அதே இடத்தில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்குப் பிறகு வனுவாட்டு அரசாங்க இணையதளங்கள் ஆஃப்லைனில் இருந்தன. சுமார் 3,30,000 மக்கள் வசிக்கும் 80 தீவுகளின் குழுவான வனுவாட்டுவில் சில கடற்கரைகளுக்கு சுனாமி அலைகள் வரலாம் என USGS எச்சரித்துள்ளது.