பசுமை விழிப்புணர்வு - இலக்கை எட்டிய Spread the wing குழுவின் கார் பயணம்!
ரோட்டரி கிளப் ஆப் சென்னை மெராக்கி குழுவின், ஸ்பிரட் தி விங் கார் பயணத்தின் இலக்கை எட்டியதை அடுத்து, 3 பெண்களும் மீண்டும் சென்னை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர்.
Advertisement
சர்வதேச பசுமை வனத்தை உருவாக்கும் விதமாக, ரோட்டரி கிளப் ஆப் சென்னை, மெராக்கி குழுவின் சார்பில், இந்தியா - நேபாள் இடையே 3 பெண்கள் காரில் பசுமை பயணம் மேற்கொண்டனர்.
அதன்படி "ஸ்பிரெட் தி விங்" எனும் பெயரில் இந்த பசுமை பயணம் கடந்த 14 ஆம் தேதி சென்னையில் இருந்து தொடங்கியது. ரோட்டரி மிரக்கி அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களரான சிவபாலா ராஜேந்திரன், கோதங்கி சுசித்ரா, சரவண செல்வி ஆகிய 3 பெண்கள், 13 நாட்கள், 6 ஆயிரத்து 360 கிலோ மீட்டர் தூரம் காரில் பயணம் மேற்கொண்டு, கடந்த 21 ஆம் தேதி நேபாளம் சென்றடைந்தனர்.
அவர்களை காத்மாண்டுவில் ரோட்டரி ஆளுநர் ராஜேந்திரமன் வரவேற்றார். மேலும், காத்மாண்டு அரச பரம்பரையை சேர்ந்த ஜெயா மற்றும் முக்கிய நபர்களை சந்தித்த பின்னர், சர்வதேச ரோட்டரி சங்கத்தின் மூலம் காத்மாண்டுவில் பராமரிக்கப்பட்டு வரும் கோகர்னிகா வனத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அதே போல பகத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நேபாள கலாச்சார நடனங்கள் ஆடி கௌரவிக்கப்பட்டது.