செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் கவிழ்ந்த பேருந்து - 8 பேர் பலி!

12:04 PM Dec 28, 2024 IST | Murugesan M

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்தனர்.

Advertisement

பதிண்டாவில் கால்வாயில் அமைந்துள்ள பாலத்தின் மீது பேருந்து சென்ற போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் பாய்ந்தது. இதில், பேருந்தில் பயணித்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர். அத்துடன் பேருந்து விபத்தில் காயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

இதனிடையே விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அதேப்போல் பிரதமர் மோடி, உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோருக்கு 50ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
BathindaBathinda bus accidentbus fell into a canalMAINpunjab
Advertisement
Next Article