பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு!
தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்திட ஆயிரத்து 31 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மற்றும் ஜெர்மன் வளர்ச்சி வங்கிக் கடனுதவியுடன் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளுக்கு ஆயிரத்து 125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கிண்டியில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பன்முக போக்குவரத்து முனையம் அமைக்கப்படும் என்றும், நகர்ப்புறங்களை ஒட்டிய ஊரக பகுதிகளில் உள்ள 2 ஆயிரம் வழித்தடங்களில் சிற்றுந்து திட்டம் விரிவுப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
மகளிர் விடியல் பயணத் திட்டத்திற்கான 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதியும், மாணவர்களுக்கான பேருந்துக் கட்டண மானியத்திற்காக ஆயிரத்து 782 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.