செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பட்ஜெட்டில் ரூ.24 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கும் பயன் : நிர்மலா சீதாராமன்!

11:01 AM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மத்திய பட்ஜெட்டின் மூலம் 24 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோரும் பயனடைவர் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,

கடந்த 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளுடன் தற்போதைய நிதிநிலை அறிக்கையை ஒப்பிட்டால்,  ஆண்டுக்கு 24 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் பட்ஜெட் மூலம் பயன்பெறுவது தெரிய வரும் என குறிப்பிட்டார்.

Advertisement

திருத்தப்பட்ட வரி வீதத்தின் மூலம் வருமான வரி தாக்கல் செய்வோர் பழைய முறையைக் காட்டிலும் தற்போது கூடுதலாக 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

12 லட்ச ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் மட்டுமன்றி, அதை விட இருமடங்கு, அதாவது 24 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோரும் பட்ஜெட் மூலம் பயன்பெறுவர் என தெளிவுபடுத்தினார்.

Advertisement
Tags :
MAINNirmala SitharamanThe budget will also benefit those who earn up to Rs.24 lakh: Nirmala Sitharaman!
Advertisement