செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது - நாளை நிதிநிலை அறிக்கை தாக்கல்!

06:25 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் இன்று தொடங்குகிறது.

Advertisement

நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காலை 11 மணிக்கு உரையாற்ற உள்ளார். அவரைத் தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்வார்.

இதனைத் தொடர்ந்து நாளை, 2025-26ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உரையாற்ற உள்ளார்.  அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நாடாளுமன்ற இரு அவைகளிலும், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும்.

Advertisement

இதற்கு பிப்ரவரி 6ஆம் தேதி பிரதமர் மோடி பதிலளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டுடன் சேர்த்து 16 புதிய மசோதாக்களையும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக வஃக்பு சட்டதிருத்த மசோதா, ரயில்வே சட்டதிருத்த மசோதா, வங்கி சட்டதிருத்த மசோதா, ஏற்றுமதி சட்டதிருத்த மசோதா உட்பட 16 புதிய மசோதாக்கள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.                      இரண்டு கட்ட அமர்வுகளாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மொத்தம் 27 அமர்வுகள் இடம்பெறுகின்றன.  9 அமர்வுகளைக் கொண்ட முதல் கட்டம் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முடிவடையும்.

தொடர்ந்து, இரண்டாம் கட்டம் மார்ச் 10 முதல் ஏப்ரல் 4 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

Advertisement
Tags :
Budget Session for 2025-26FEATUREDFinance Minister Nirmala SitharamanMAINParliament begins todayPresident Draupadi Murmu
Advertisement