பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் - பிரதமர் மோடி உறுதி!
பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
Advertisement
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டின் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை மா லட்சுமி தொடர்ந்து ஆசீர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.
இந்தியா ஜனநாயக நாடாக 75 ஆண்டுகளை நிறைவு செய்தது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றும், உலக அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
தமது மூன்றாவது பதவிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் முழுமையான பட்ஜெட் என்றும், 2047 ஆம் ஆண்டில், சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, இந்தியா தனது விசித் பாரதத்தின் இலக்கை நிறைவேற்றும் என்றும் கூறினார். இந்த பட்ஜெட் தேசத்திற்கு புதிய ஆற்றலையும் நம்பிக்கையையும் அளிக்கும் என்றும் நம்பிக்கையுடன் கூற முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நமது நாடு அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்றும், இன்று 20-25 வயதுடையவர்கள் விசித் பாரதத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இருப்பார்கள் என்றும், அவர்கள் 50 வயதை அடையும் போது விசித் பாரதத்தின் கொள்கை வகுப்பதில் தலைமையில் இருப்பார்கள் என்றும் மோடி கூறினார்.