பட்டாசு விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசு ஏற்கும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
02:30 PM Nov 10, 2024 IST
|
Murugesan M
பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோரின் குழந்தைகளின் கல்விச்செலவை தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Advertisement
விருதுநகரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், விருதுநகரில் 95 சதவிதத்திற்கும் மேல் உயர்கல்வியில் சேர்க்கை நடைபெறுவது முக்கிய சாதனை என கூறினார்.
பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி வரை அனைத்துச் செலவையும் அரசே ஏற்கும் என்றும், இதற்கென்று புதிய நிதியம் உருவாக்கப்பட்டு, முதல்கட்டமாக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும், வீடற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
Advertisement
Next Article