பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி விருப்பம்!
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
Advertisement
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தாவின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கூட்டம் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 100-ஆவது சுதந்திர தினத்தின்போது பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் முதலமைச்சராக வேண்டும் என்றும், இஸ்ரோ தலைவர் உள்ளிட்ட முக்கிய தலைமை பொறுப்புகளுக்கு வர வேண்டுமென்றும் தெரிவித்தார்.
மேலும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் நாற்காலியில் அமர முடியாத நிலை உள்ளதாகவும், சில இடங்களில் மக்கள் காலணி அணிந்து நடக்க முடியாத சூழல் உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து அரசு நந்தனார் ஆண்கள் பள்ளி விடுதிக்குச் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி. மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.