பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.78.80 லட்சம்!
12:18 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
ஈரோடு சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக 78 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
பண்ணாரி மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், பரம்பரை அறங்காவலர்கள், அலுவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
உண்டியல் காணிக்கையாக 78 லட்சத்து 80 ஆயிரத்து 743 ரூபாய் ரொக்கம், 181 கிராம் தங்கம், 761 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement