பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் யூரியா பறிமுதல் : 2 பேர் கைது!
கோவில்பட்டி அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 டன் யூரியாவை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக உட்பட 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திட்டங்குளத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கிடங்கில் யூரியா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில், அங்கு சென்ற போலீசார், தொழிற்பேட்டையில் உள்ள கிடங்கில் யூரியா இருப்பதை கண்டறிந்து, பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். தலை மறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
இதனிடையே, போலீசார் கொடுத்த தகவலின் பேரில், அங்கு வந்த அங்கு வேளாண்மை அலுவலர் காயத்ரி, அந்த கிடங்கை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகளுக்கு மானிய விலையில் கொடுக்க வேண்டிய யூரியா மூட்டைகளை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.