பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த ராகுல் காந்தி - மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
பத்திரிகையாளர்களை தரக்குறைவாக விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அமராவதியில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பத்திரிகையாளர்கள் ஆளும் அரசின் அடிமைகளாக செயல்படுவதாக விமர்சித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து மும்பை பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பத்திரிகையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு ராகுல் காந்தி எப்போதாவது குரல் கொடுத்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியது.
பத்திரிகையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைய காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த 1980 மற்றும் 1990-களில் புதிய தாராளமயக் கொள்கையை பின்பற்றியதே காரணம் என குற்றம்சாட்டிய மும்பை பத்திரிகையாளர் சங்கம், அதுவரை பத்திரிகையாளர்கள் சிறப்பான பணி பாதுகாப்பைக் கொண்டிருந்ததாக அறிக்கையில் கூறியுள்ளது.