பத்திர பதிவு கட்டணத்தை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
04:13 PM Mar 19, 2025 IST
|
Murugesan M
பத்திரப் பதிவு கட்டணத்தைக் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைத்தால் மட்டுமே பெண்கள் பெயரில் சொத்து வாங்க முன்வருவார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர். வானதி சீனிவாசன், பத்திரப் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்பது பெரிய வித்தியாசத்தைத் தராது எனக் கூறினார்.
குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைத்தால் மட்டுமே பெண்கள் பெயரில் சொத்து வாங்க முன்வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Advertisement
இதையடுத்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் கருணைப் பார்வை கிடைத்தால் அனைத்தையும் செய்யலாம் எனக் கூறினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன், அரசியல் காரணங்களுக்காக ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் எனப் பேசுவதாக விமர்சித்தார்.
Advertisement