பந்தலூர் அருகே சாலையோரம் நின்ற காரை சேதப்படுத்திய காட்டு யானை!
11:19 AM Nov 23, 2024 IST
|
Murugesan M
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, காட்டு யானை ஒன்று ஆக்ரோசமாக தாக்கி சேதப்படுத்தியது.
Advertisement
நெலாக்கோட்டை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மிகுந்த ஆக்ரோசத்துடன் தந்தங்களால் குத்தி சேதப்படுத்தியது.
அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பட்டாசுகள் வெடித்து யானையை விரட்டினர். காரில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Advertisement
Advertisement