பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் அறிவித்துள்ளது.
குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு ரயிலை பலூச் விடுதலை ராணுவ அமைப்பினர் சிறைபிடித்தனர். போலான் மாவட்டத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே சுரங்கப் பாதையில் ரயில் நுழைந்த போது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
இதன் காரணமாக ஜாஃபர் விரைவு ரயில் தடம் புரண்டது. இதனைப் பயன்படுத்தி பலூச் அமைப்பினர், 400-க்கும் மேற்பட்ட பயணிகளை பிணைக்கைதிகளாக பிடித்தனர். அதைத்தொடர்ந்து .
கிளர்ச்சியாளர்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 33 தீவிரவாதிகள் மற்றும் 21 பணயக்கைதிகள் உயிரிழந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர். தற்போது மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் தெரிவித்துள்ளது.