பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பரிசீலனை - சிவராஜ் சிங் சவுஹான் தகவல்!
03:30 PM Dec 06, 2024 IST
|
Murugesan M
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலிப்பதாக வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தெரிவித்துள்ளார்.
Advertisement
மாநிலங்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சொற்ப விலையில் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும்பட்சத்தில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
விவசாயிகளின் நலனை உறுதிப்படுத்த மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான்,
Advertisement
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார்.
அத்துடன் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலேயே கொள்முதல் செய்யப்பட்டு வருவதையும் அவர் மேற்கோள்காட்டினார்.
Advertisement