பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில் துறை வளர்ச்சி பெறும் - தமிழக அரசு விளக்கம்!
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படுவது குறித்து தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், இளைஞர்களின் வேலை வாய்ப்புகளுக்கும், பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்து உள்ளதாக தெரிவித்துள்ள தமிழ அரசு, பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் பரந்தூரில் விமான நிலையம் அமைவதால் தொழில், மருத்துவம், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என்றும், பரந்தூர் விமான நிலையம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உறுதியாக தேவை என்பதால் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.