பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை : அண்ணாமலை விளக்கம்!
04:29 PM Jan 20, 2025 IST | Murugesan M
புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளரிடம் பேசிய அவர்,
Advertisement
புதிய விமான நிலையம் அமைக்க மாநில அரசு தேர்ந்தெடுத்த பட்டியலில்தான் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. பரந்தூரை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
பரந்தூர் பகுதி மக்களின் கோரிக்கைகள் நியாயமானது. பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக விஜய் ஆக்கப்பூர்வமான யோசனைகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
Advertisement
தமிழகம் போன்ற வளர்ந்து வரும் மாநிலத்திற்கு புதிய விமான நிலையம் அவசியம். சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
இந்தியாவிலேயே குறைந்த இடவசதி கொண்ட விமான நிலையம் உள்ள இடம் சென்னை தான் எனத் தெரிவித்தார்.
Advertisement